பிந்திய பதிவுகள்
Loading...
Tuesday, February 25, 2014

1979639_617303358343363_335479782_nஒருவர் கடைக்கு பொருள் வாங்க சென்றார்.அங்கு ஒரு சிறுவன் வந்தான்.கடைக்காரர் பொருள் வாங்க வந்த வாடிக்கையாளரின் காதில்
"இந்த சிருவன்தான் உலகத்தில் மிகப்பெரிய முட்டாள்"என்றார்
உறுதிப்படுத்துகிறேன் பார் என்றவர்.வலது கையில் ஐந்து ரூபாவையும் இடது கையில் ஒரு ரூபாவையும் கொடுத்து எது வேண்டும் என்றார் சிறுவனிடம்.சிறுவன் இடது கையில் உள்ள ஒரு ரூபாவை எடுத்து கொண்டு போனான்.
வாடிக்கையாளர் சிறுவனை தொடர்ந்து சென்றார்.சிறுவன் ஐஸ் கிரீம் வாங்கும் கடையில் நின்றான்.
"சிறுவனே உனக்கு ஐந்து ரூபா தந்தும் எதற்கு நீ வழமையாக ஒரு ரூபாவை தேர்ந்து எடுக்கிறாய்"என்று வாடிக்கையாளர் கேட்டார்.
"ஒரு ரூபாவை விட்டுவிட்டு நான் அவரிடம் இருந்து எப்போது ஐந்து ரூபாவை எடுக்கிறேனே அந்த தினத்தில் விளையாட்டு முடிந்துவிடும்.அதன் பின் எனக்கு ஒரு ரூபாவும் இல்லை என்றான் சிறுவன்"
பெரியோரிடம் இருந்து அதிகம் கற்று கொள்வோம் சிறியவர்களிடம் இருந்து அதைவிட அதிகம் கற்றுக்கொள்ளவும் நேர்கிறது.
"முதலில் விளையாட்டின் விதி முறைகளை கற்றுக்கொள் அப்போது மற்றவர்களைவிட திறமையாக விளையாட முடியும்" என்ற ஐன்ஸ்டீனின் கூற்று உண்மையே.
நமக்கு எது தொடராக கிடைக்குமோ அதை தேர்வு செய்ய முயற்சிக்க வேண்டும்.எதை எடுத்தால் இடையில் தட்டி பரிக்கப்படுமோ அதை முயட்சி செய்ய கூடாது.

0 comments:

Post a Comment