பிந்திய பதிவுகள்
Loading...
Thursday, November 14, 2013

1452447_638789059506002_1110225060_n

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்


காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -


ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.


-கவிக்கோ அப்துல் ரஹ்மான்

Anñisa | முஸ்லிம் பெண்கள் எனும் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது…

0 comments:

Post a Comment