பிந்திய பதிவுகள்
Loading...
Tuesday, September 16, 2014

10458036_810640715623329_403071884770967391_n

ஓர் உணவகத்தின் வெளியே பலகையில், "நீங்கள் சாப்பிட்டதற்கான பில் உங்களுடைய பேரன்களிடம் வசூலிக்கப்படும்'
என்று எழுதியிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த இரு நண்பர்களில் ஒருவன், ""வா மச்சான். ஒரு வெட்டு வெட்டலாம். எப்ப கல்யாணமாகி, எப்ப புள்ளை பொறந்து, எப்ப பேரன் பேத்தி எடுக்கிறது?'' என்று கூறி உணவகத்தின் உள்ளே நுழைந்து, ஆளுக்கு 1000 ரூபாய்க்குச் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவர்களிடம், பில்லை நீட்டினார் முதலாளி.
அது 2 ஆயிரம் ரூபாய்க்கான பில்.
""இது அநியாயம். நாங்கள் சாப்பிட்டதை எங்களுடைய பேரன்களிடம் தானே வசூல் பண்ண வேண்டும்? அப்படித்தானே எழுதியிருக்கிறீர்கள்?'' என்று ஒரு நண்பன் கத்தினான்.
உணவக முதலாளி சொன்னார்: ""இந்த பில் நீங்கள் சாப்பிட்டதற்கான பில் அல்ல. உங்களுடைய தாத்தாக்கள் சாப்பிட்டதற்கான பில்''

0 comments:

Post a Comment