பிந்திய பதிவுகள்
Loading...
Monday, November 25, 2013

samsung_apple_coin_002அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர்(6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லொறிகள் வந்துள்ளது.

இதனை பார்த்த செக்யூரிட்டி முகவரி மாறிவந்துள்ளதாக வாதாடியுள்ளார்.

அதற்கு சரியான முகவரி தான் என்று கூறி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள்ளது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார், உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம், பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

அத்தனை லொறிகளிலும் சில்லரை காசுகள் குவிந்திருந்தது, அனைத்தும் 5 சென்ட் நாணயங்கள்.

மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள்.

Lankasri இனையத் தளத்திலிருந்து…

0 comments:

Post a Comment