பிந்திய பதிவுகள்
Loading...
Sunday, October 13, 2013

ravenous_brain_rectநாம் 10 விழுக்காடு மூளையைத் தான் பயன் படுத்துகிறோம். 100 விழுக்காடு பயன்படுத்தினால், அறிவியலாளர் அய்ன்ஸ்டீன் போல் இருப்போம் என்று அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு விழுக்காடு வேலை செய்யும் உறுப்பு மூளைதான்.சுவை, மணம், தொடு உணர்வு, சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. மூளை பற்றிய சில தகவல்கள்...

வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.

ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.

நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.

மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.

வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்... அதா வது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!

18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.

நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. 

மனித உடலில் உள்ள ரத்தத்திலும் ஆக்சிஜனிலும் 20 விழுக்காடை மூளைதான் பயன்படுத்துகிறது.

மனித மூளை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்படக் கூடியது.

வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும் பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரொஜன் நினைவுத் திறனை வளர்க்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் பெண்கள் அதிக நினைவாற்றலோடு இருக்கிறார்களாம்.

மனிதர்கள் எல்லோருக்குமே கனவுகள் வரும். சிலர் அதை மறந்துவிட்டு, கனவு காணுவதில்லை என்று சொல்வதுண்டு. உண்மையில் கனவுதான் மூளையின் உடற்பயிற்சி. நாம் விழிப்புடன் இருப்பதை விட கனவு காணும்போதுதான் மூளை அதிக செயல் திறனுடன் இருக்கிறதாம்.

நாம் சிரிக்கும்போது நம் மூளையின் வெவ்வேறு அய்ந்து பகுதிகளில் பலமான தாக்கம் ஏற்படுகிறது. மூளைக்கு அது கடும் வேலைதான்.

இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளையில் கார்பஸ் கொலாசம் என்ற பகுதி வலது கை பழக்கம் கொண்டவர்களை விட 11 விழுக்காடு பெரிதாக இருக்கிறது. 

அண்மைய ஆய்வின்படி மூளை கசக்கிப் பிழியப்படும் முதல் 3 மன இறுக்கத்தைத் தரும் வேலைகள்...

1.கணக்காளர், 2. நூலகர், 3. கனரக வாகன ஓட்டுனர்

மூளையின் எடை பிறந்த குழந்தைக்கு 350-400 கிராம் யானைக்கு 4783 கிராம், பசுவிற்கு 425-458 கிராம், தங்கமீன் 0.097 கிராம், பீகிள் எனும் வகை நாய்க்கு 532 கிராம், கொரில்லா குரங்குகிற்கு 465-540 கிராம்.

அடுத்த வருவதும் மூளை பற்றிய தகவல் தான்:

நம்மை விட ஓர் அறிவாளி இந்த உலகத்தில் இருக்கிறதென்றால், அது கணினி தான் என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். சுமார் 530 பில்லியன் நரம்புகளின் திறனை பிரதிபலிக்கும் தன்மையுள்ள புளூ ஜீன்-கியூ சீக்குவா எனும் அதி விரைவு கணினி, ஒரு நொடிக்கு சுமார் 16 லட்சம் கோடி கணக்குகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாம். ஆனால் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் க்வாபெனா போஹென், இந்த புளூ ஜீன்-கியூ சீக்குவாவின் கணக்குத்திறன் கூட மனித மூளையுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு திறன் கொண்டதல்ல என்கிறார்.

ஏனென்றால், உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் என்கிறார் போஹென். 

இதற்கு காரணம், மனித மூளையானது ஒரே சமயத்தில் பல கணக்குகளை செய்யக்கூடிய திறன் கொண்டது என்பதுதான்! அதாவது, மூளையிலுள்ள பல்வேறு நரம்புக்குழுக்கள் ஒரே சமயத்தில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிகின்றன. ஆனால் எவ்வளவு பெரிய அதிவிரைவு கணினியாக இருந்தாலும் கூட அதனால் ஒவ்வொரு படியாகத்தான் முன்னேறிச் செல்ல முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பிரச்சினைக்கான தீர்வைத்தான் கண்டறிய முடியுமாம்.

நியூரோ மார்பிக் பொறியியல் எனும் நவீன பொறியியல் துறையானது, புதுமையான வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் துணையுடன் மூளையின் கணக்குத் திறன்களை பிரதிபலிக்கக்கூடிய மின்னணு கருவிகளை உருவாக்க முனைகிறது. இத்துறையில் பணியாற்றும் பேராசிரியர் போ ஹெனின் ஆய்வுக்குழு, சமீபத்தில் நியூரோ கிரிட் எனும் செயற்கை மூளைக்கருவியை உருவாக்கியுள்ளது. சுமார் 10 லட்சம் நரம்புகளின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் திறனுள்ளது இந்த நியூரோ கிரிட் ஆனால் பிற அதிவிரைவு கணினிகளால் முடியாத செயலான 10 லட்சம் நரம்புகள் இயற்கையில் எப்படி இயங்கும் என்பதை நம் கண்முன்னே கொண்டுவர நியூரோ கிரிட்டினால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

மூளையின் ஒரு நொடி செயல்பாட்டினை மேற்கொள்ள அதிவிரைவு கணினி சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனவாம். மூளையின் ஒரு நொடி செயல்பாட்டினை மேற்கொள்ள நியூரோகிரிட்டும் ஒரே ஒரு நொடி தான் எடுத்துக் கொள்கிறதாம். நியூரோகிரிட்டிலுள்ள 16 சிப்களில் சுமார் 65 ஆயிரம் சிலிக்கான் நரம்புகள் உள்ளன. இந்த சிலிக்கான் நரம்புகளின் செயல்பாடுகளை, சுமார் 80 சோதனைக் குறியீடுகளின் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாமாம். இதன் மூலம் மூளையிலுள்ள வெவ்வேறு விதமான நரம்புகளின் இயல்புகளை பிரதிபலிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில், மனித மூளையை ஆய்வுசெய்யும் சக்தி வாய்ந்த கருவியாக செயல்படும் இந்த நியூரோ கிரிட், மனித மூளையின் இயல்புகளை படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், இதுவரை முழுமையாக ஆய்வு செய்ய முடியாத ஆட்டிசம் என்ற மன இறுக்க நோய் மற்றும் மனப்பிளவு போன்ற சிக்கலான மூளைக்கோளாறுகள் குறித்த அறிவியல் உண்மைகளைக் கண்டறியவும் நியூரோ கிரிட் உதவும் என்கிறார் பேராசிரியர் போஹென்.

0 comments:

Post a Comment