பிந்திய பதிவுகள்
Loading...
Tuesday, October 8, 2013

birds-familyஒரு காட்டில் ஒரு ஆண் பெண் பறவைகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. பெண பறவை கரு தரித்து முட்டை இட ஆரம்பித்தது. இரு பறவைகளும் தாய் தந்தை ஆக போவதை நினைத்து மிகவும் ஆனந்த மாக இருந்தது. ஒரு நாள் இரையை தேடுவதற்க்காக இரு பறவைகளும் கூட்டை விட்டு வெளியே சென்றது அந்த சமயைம் மரத்தின் கிழ் ஒரு பாம்பு இது தான் சமயம் என்று மரத்தின் மேல் ஏறி அனைத்து முட்டைகளையும் தின்று விட்டன.

திரும்பி வந்த பறவைகள் கூட்டில் முட்டை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தன பெண் பறவை கண்ணீர் வீட்டு அழுது புலம்பியது ஆண் பறவை ஆறுதல் கூறி சமாதானம் செய்தது.இப்படி முட்டைகளை பல முறை பறைவகள் இழந்தன. கடைசியாக அந்த பறைவகள் முட்டைகளை எடுத்து செல்வது மரத்தின் கீழ் உள்ள பாம்புதான் என்று கண்டுபிடித்தது, அனால் பாம்பை எதிர்த்து விரட்டும் அளவுக்கு நமக்கு சக்தி இல்லையே என்று பெண் பறவை அழுதது. நாம் இங்குஇருந்து வெளியேறி வெறு இடத்திற்கு சென்று விடலாம் என்று ஆலோசனை கூறியது பெண் பறவை அதற்கு ஆண் பறவை நாம் புதிதாக செல்லும் இடத்திலும் வேறு எதாவது துன்பம் நேரிட்டால் அங்கிருந்து வெளியேறுவாயா என்று கேளவி எழுப்பியது. இங்கேயே இருந்து இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை யோசிப்போம் என்றது ஆண் பறவை. பிறகு ஆண் பறவை தன் நண்பனான நரியாரிடம் சென்று நண்பா நரியாரே என் மனைவி இடும் முட்டைகளை எல்லாம் ஒரு பாம்பு தனக்கு இரையாக்கிக் கொள்கிறது நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்கு ஒரு உபாயம் நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றது. நரி சிறிது நேரம் யோசித்து ஒரு யோசனை கூறியது. பறவையே நீ அரசரின் மாளிகைக்கு சென்று அங்கு மாகராணி அனிந்திருக்கும் விலையுர்ந்த இரத்தின மாலை அல்லது வைர மாலையை கவர்ந்து கொண்டு இந்த பாம்பின் பொந்துக்குள் போட்டு விடு என்றது அதே போல் பறவை மாகராணியின் இரத்தின மாலையை கவர்ந்து பறந்தது, காவலாளிகள் அந்த பறவையை பின் தொடர்ந்து ஒடினர். பறவை பாம்பின் பொந்தை நெருங்கியவுடன் இரத்தின மாலையை பொந்திற்குள் போட்டுவிட்டு சென்றது காவலாளிகள் பொந்தின் அருகே சென்று தன் கையில் உள்ள ஈட்டியால் பொந்திற்குள் விட்டு இரத்தின மாலையை எடுக்க முயற்ச்சி செய்தனர் அப்போது பொந்திறகுள் இருந்த பாம்பு கோபத்துடன் சீறி வெளிய வந்தது. பாம்பை கண்ட காவலாளிகள் தன் கையில் வைத்திருந்த ஈட்டியால் பாம்பினை தாக்கினார் பாம்பும் அங்கேயே இறந்துபோனது.

மரத்தின் மேல்லிருந்த பறவைகள் இந்த காட்சிகளை கண்டு ஆனந்தத்தில் திலைத்தது. சிறிது காலம் கழித்து அந்த பறவைகள் தன் சேய் பறவைகளோடு ஆனந்தமாக வாழ்ந்தது.கஷ்டத்தை கண்டு பயந்து ஒடினா பிரச்சனைதான் பெருசாகும். ஒரு சிலர் கடன் தொல்லைகளாலும் மற்ற குடும்ப பிரச்சனைகளாலும் ஊரை விட்டே சென்று விடுகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு இக்கதை சமர்ப்பனம்.

Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment